இளம் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ராணுவ அதிகாரி: பொலிசார் நடவடிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

மொடலிங் துறையில் அறிமுகப்படுத்துவதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் ராணுவ உயரதிகாரி ஒருவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி ராணுவ அதிகாரியின் மகளே புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர், தனது தந்தையின் நண்பரான ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணலாக பதவி வகிப்பவர், அங்குள்ள திரையரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னையும், தனது தந்தையையும் அழைத்தார்.

பின்னர் அவர் தனது மகள் மும்பையில் மொடலிங் துறையில் இருப்பதாகவும் நீ சென்றால் உன்னையும் மாடலிங்காக மாறிவிடுவாய் என்றும் ஆசை காட்டினார்.

மொடலிங் துறையில் சேர்த்து விடுவதாக கூறி என்னை தன்னுடன் மும்பைக்கு வருமாறு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்றதும் அவர் என்னை ஒரு அறையில் தங்க வைத்தார். குளிர்பானத்தில் மதுவை கலந்து என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். அப்போது என்னை கற்பழித்தார். இதற்கு அவரது நண்பர்களும் உதவி செய்தனர் என புகாறில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்