ஜெயலலிதா சேவல் சின்னத்தை தெரிவு செய்ததின் சுவாரசிய பின்னணி

Report Print Deepthi Deepthi in இந்தியா

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் ஜானகி அணி தலைமையில் ஒரு அணியும் உருவாகின.

1989 ஜனவரி சட்டசபை தேர்தலுக்காக இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால் 1988 இறுதியில் இரட்டை சிலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

இதனால் இரு அணிகளும் தங்களுக்கான சின்னத்தை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதில் ஜெயலலிதா அணி புறா சின்னத்தை தெரிவு செய்தார்.

இலை போன்று புறாவின் இறக்கைகள் இருக்கிறது என்பதற்காக இந்த சின்னம் தெரிவுசெய்யப்பட்டது.

ஜெயலலிதா சேவல் சின்னத்தை தெரிவு செய்தார். சேவல் என்பது வெற்றியின் சின்னம்; அதாவது தமிழ்க் கடவுளான முருகனின் வெற்றி சின்னம்; ஜாதக ரீதியாகவும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் சேவல் கை கொடுக்கும் என அச்சின்னத்தை ஜெயலலிதா அணி தேர்வு செய்தது.

போயஸ் கார்டனில் சேவல் சின்ன கொடியை பறக்கவிட்டு பூஜையும் செய்யப்பட்டன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்