மாதவிடாய் காலத்தில் சாம்பல், மணல் பயன்படுத்தும் பெண்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவில் வீடற்று சாலைகளில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

பெண்ணாக பிறந்த அனைவரும் அனுபவிக்கவேண்டிய தொடர் நிகழ்வு. ஆனால் அந்த நாட்கள் மிகவும் கொடுமையானவை, சமாளிப்பது மிகவும் சிரமம், கிழிந்துபோன துணிகள், காகிதங்கள், பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துவோம் என தெரிவிக்கிறார்கள்.

வசிப்பதற்கு இடமும், அணிவதற்கு ஆடையும் கிடைக்காத போது, மாதவிடாய் காலத்தில் மட்டும் எப்படி எங்களுக்கு துணி கிடைக்கும் என்று கேட்கிறார்கள்.

வட இந்திய மாநிலங்களில் அதிகமான மக்கள் வீடற்று சாலை ஓரங்களில் ஒரு டெண்டு போன்று அமைத்து வசித்து வருகிறார்கள்.

மூன்று செங்கற்களை வைத்த, தங்களது பிள்ளைகள் கொண்டு விறகு சுள்ளிகளை வைத்துதான் இவர்களது சமையல் அன்றாடம் நடக்கிறது.

தேநீர் முதல் சோறு, சப்பாத்தி என அனைத்தும் இந்த மூன்று செங்கல் வைக்கப்பட்ட அடுப்பிலேயே தயாராகிறது. பார்ப்பதற்கு வேலையில் இல்லை, கையில் பணமும் இல்லை என விரக்தியாக இருக்கிறார்கள் இந்த சாலையோர பெண்கள்.

மாதவிலக்கு சமயத்தில் சாம்பல், மணல் போன்றவற்றை செய்தித்தாள்கள்களுக்குள் சுற்றிவைத்து அதை நாப்கினாக பயன்படுத்துகிறார்கள், அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சானிடரி நேப்கின்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருக்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஜர்மீனா இஸ்ரார் கான்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2015-16) அறிக்கையின்படி, 48.5 சதவிகித கிராமப்புறப் பெண்களும், 77.5 சதவிகித நகர்ப்புற பெண்களும் மட்டுமே சேனிடரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த இந்தியப் பெண்களில் 57.6 சதவீதத்தினர் மட்டுமே சானிடரி நேப்கின்களை பன்படுத்துகிறார்கள்.

சானிடரி நேப்கின்கள் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று, இதற்கு இந்த அளவு வரி விதிக்கவேண்டியது அவசியம் இல்லை என உயர் நீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்