பாரதியாராய் தன்னை மாற்றி டுவிட்டரில் கெத்துக்காட்டும் கமல்.

Report Print Samaran Samaran in இந்தியா

நடிகர் கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ப்ரோஃபைல் போட்டோவை மாற்றியுள்ளார். இந்தப் புதிய புகைப்படத்தில் பாரதியார் உருவத்தில் கமல் முகம் மார்ஃப் செய்து பொருத்தப்பட்டுள்ளது. இது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நேரங்களுக்கு முன்னர் கமல்ஹாசன், அறப்போர் இயக்கத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, `அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள்' என்று ட்வீட்டியிருந்தார்.

சில நாள்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில், `ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம். தயவாய்' என்று தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், `கமல் பொதுவாக குற்றச்சாட்டுகளைக் கூறுவது உள்நோக்கம் கொண்டது. அவர் யாருடைய கைப்பாவையாகவோ செயல்பட்டு வருவது நிதர்சனமான உண்மையாகத் தெரிகிறது. அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் கமல்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கமல்ஹாசனுக்கு இந்த சீப் பாப்புலாரிட்டி தேவையில்லை' என்று பதில் கூறியிருந்தார்.

இதற்குத்தான் அறப்போர் இயக்கத்தின் வீடியோவை ட்வீட் செய்து பதிலடி கொடுத்திருந்தார் கமல்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்