மேடையில் குழம்பிய ஸ்டாலின்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நெல்லை மாவட்டத்தில் நடந்த பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர் தமிழக அரசை கடுமையாகச் சாடினார். பின்னர், கலைஞர் ஆட்சியின்போது மாநிலங்களுக்கான உரிமைகளை வாதாடிப் பெற்றார் என்பதை விளக்கும் வகையில், இந்திரா பிரதமராக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்களை விளக்கினார்.

அப்போது, ’முன்பெல்லாம் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்திலும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலும் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனர்.

இது தொடர்பாக கலைஞர் வாதாடிப் பேசியதால், ஆகஸ்ட் 15-ம் தேதி மாநில முதல்வர்களும் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்தில் ஆளுநரும் கொடியேற்றுவது நடைமுறைக்கு வந்தது’ என்று பேசினார்

ஜனவரி 26-ம் தேதிக்குப் பதிலாக 25-ம் தேதி என்று ஸ்டாலின் தவறுதலாகக் குறிப்பிட்டார். அதனால், பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு எழுந்து ஸ்டாலின் அருகே வந்து தவறை சுட்டிக்காட்டினார். அவர் கூறியது தெளிவாக இல்லாததால், ஸ்டாலின் மீண்டும், ’டிசம்பர் 25, இல்ல... இல்ல ஜனவரி 25 குடியரசு தினம்’ என மாறி மாறிப் பேசினார்.

சிறிது நேரத்தில் தனது தவறை உணர்ந்த அவர், மீண்டும் தெளிவாகப் பேசி முடித்தார். இந்த விவகாரம் கூட்டத்தில் இருந்தவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்