ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்பட்டதா? வருமான வரித்துறை தகவல்

Report Print Kabilan in இந்தியா

போயஸ் கார்டனில் சோதனை நடந்த போது ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வருமான வரித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரி கூறுகையில், சசிகலாவின் உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக பொருளாதார நுண்ணறிவு பிரிவு அளித்த தகவலினால், ஆவணங்கள் அடிப்படையில் பல மாதங்களாக கண்காணித்துதான் இந்த சோதனையை நடத்தினோம்.

இந்த சோதனையில், 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 5 கிலோ தங்கம், ரூ.7 கோடி மதிப்பிலான ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

போயஸ் தோட்டத்தில் சசிகலா, பூங்குன்றன் அறைகளில் ஆவணங்கள் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்கு சொந்தமான ஐந்து அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில், 1 லேப்டாப், 2 டேப்ளட் மற்றும் ஏராளமான பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன, அவற்றை ஆய்வு செய்து, தகவல்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஆனால், ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்