தண்டவாளத்தில் படுத்திருந்த நபர்: பயணித்த ரயில்

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் தண்டவாளத்தினை கடந்து மற்றொரு பிளாட் பார்முக்கு செல்ல முயற்சித்தபோது ரயிலுக்கு அடியில் சிக்கிகொண்டு தண்டவாளத்தில் படுத்திருந்த காட்சி வெளியாகியுள்ளது.

Bankata ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர் தான் நின்றிருக்கும் பிளாட் பார்மில் இருந்து மற்றொரு பிளாட் பார்மிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, சரக்கு ரயில் வருவதை கண்ட இந்நபர் தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறார். இவர் படுத்திருக்கையில், ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ரயில் சென்றபின்னர், எவ்வித சிறு காயங்களும் இன்றி இந்நபர் எழுந்து சென்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்