வில்லங்கமான வீடியோ: பெண் எடுத்த அதிரடி முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடியோ கடைக்காரர் எடுத்த வில்லங்க வீடியோவால் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அனிதா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது வீட்டுக்கு அருகே வீடியோ கடை நடத்தி வரும் வெற்றிவேல் என்பவர், அனிதா குளிக்கும்போது வீடியோ எடுத்துள்ளார்.

அதனை, அனிதாவிடம் காட்டி நான் கேட்கும் பணத்தினை தரவில்லையென்றால் இதனை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி ரூ.2 லட்சம் மற்றும் 16 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அனிதா பொலிசில் பலமுறை புகார் அளித்திருந்தும், பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அனிதா, எனது குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று கூறி தனது உடலில் மண்ணெணைய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனை காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர், அதனைத்தொடர்ந்து இவரது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்