இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

Report Print Samaran Samaran in இந்தியா

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில், ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர்.

அத்துடன் மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர், இதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம் அடைந்திருக்ககூடும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்