மகள் கண் எதிரில் தாய்க்கு நேர்ந்த கொடுமை: அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் அரசியல்வாசி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை மகள் கண்முன்னே கொலை வெறியோடு தாக்கியுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி(30).

இவர் தனது இரண்டாவது மனைவி சங்கீதாவை கண்மூடித்தனமாக அடிக்கிறார், இதற்கிடையில் அவரது மகள் தடுக்க முயற்சித்த போதும், சங்கீதாவை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து வீடியோ எடுத்த சங்கீதாவின் சகோதரையும் அவர் அடித்துள்ளார்.

அதன் பின் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கையில், ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3-வதாக ஒரு மைனர் பெண்ணை மணம் முடித்ததாகவும், அதை சங்கீதா தட்டி கேட்டதால் இப்படி அடித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

சங்கீதா ரெட்டிதான், சீனிவாச ரெட்டிக்கு முதல் மனைவி என கூறப்பட்ட நிலையில் அவர் 2-வது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்