கணவரை கொல்ல காதலனுடன் சதித்திட்டம்: கூலிப்படையை ஏவியது அம்பலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த மனைவி, அவரின் காதலனுக்கு பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவியரசு(42), இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியுடன் ஏற்பட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து தர்மபுரியில் வசித்து வந்துள்ளார்.

தர்மபுரியில் அவருக்கு நிர்மலா(23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளைடைவில் நிர்மலாவை திருமணம் செய்து கொண்ட கவியரசு, வயகரா மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தினந்தோறும் நிர்மலாவை தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த நிர்மலா, தனது காதலனான அபினேஷிடம்(27) கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து தனது கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்து விடு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன் படி 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்ட அபினேஷ், கூலிப்படை வைத்து கவியரசுவை கொலை செய்து தர்மபுரி அருகே குண்டலப்பட்டி- மல்லிக்குட்டை செல்லும் சாலையோரத்தில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டார்.

இதையடுத்து கவியரசுவின் தாய் தனது மகனை காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, கவியரசுவின் போன், நிர்மலாவிடம் இருந்துள்ளது.

அதில் இருந்து அவர் அபினேஷூடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரியவந்துள்ளது. அதன் பின் இருவரையும் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, வசமாக சிக்கியுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அபினேஷ், நிர்மலாவுக்கு கவியரசு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து, உடலை புதைத்ததாகவும், அதற்கு தேவையான பண உதவியை, நிர்மலா செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கூட்டாளிகள் இருவரையும் கைது செய்த பொலிசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்