எரித்துக் கொல்லப்பட்ட ஹாசினி: சந்தோஷமாக வாழும் குற்றவாளி- தந்தை கதறல்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில், பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் தந்தை தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த கொடூர சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் சட்டத்தின் மீது தமக்கிருந்த நம்பிக்கை மொத்தமாக தொலைந்துள்ளதாக கூறும் ஹாசினியின் தந்தை பாபு.

கொலைக்குப் பின், குற்றவாளி பக்கத்துவீட்டு இளைஞர், ஐ.டி ஊழியர் தஷ்வந்த் தான் என்று காவல்துறை கண்டுபிடித்தபோது, 'ரெண்டு நாளா நம்மளோட சேர்ந்து அவனும் குழந்தையைத் தேடி நல்லவன் மாதிரி நடிச்சி ஏமாத்திட்டானே' என்று குமுறினார்கள் அக்கம்பக்க மக்கள்.

ஆனால், ஜாமீனில் வெளிவந்திருக்கும் தஷ்வந்த்தும் அவன் குடும்பமும் அதே வீட்டில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் தீபாவளியும் கொண்டாடி இருக்கிறார்கள் என்றார் பாபு.

இதனிடையே, தஷ்வந்த்தின் அப்பா, 'எம்மவன எப்படியாவது காப்பாத்துறேன் பாரு' என்று பாபுவிடம் சவால்விட, தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்காதோ எனத் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டுமின்றி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஹாசினி வழக்கு விசாரணையின்போது, குற்றவாளி தரப்பின் வழக்கறிஞர் தான் விடுமுறைக்காக அவுஸ்திரேலியா செல்ல இருப்பதால் வழக்கை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதை மறுத்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை டிசம்பர் மாதம் வைத்திருக்கிறது.

வழக்கை தள்ளிவெச்சிட்டா, இந்த கேஸ் எப்படி வேணும்னாலும் திசைதிரும்பும். சாட்சியங்களை மறைச்சிட முடியும். ஏற்கெனவே சாட்சிகளோட லிஸ்ட் அவங்க கையில இருக்கு. அதை வெச்சு சாட்சிகளை மிரட்டலாம், பணம் கொடுத்து விலைக்கு வாங்கிடலாம். அதனால, இந்த வழக்கைத் தள்ளிப்போடாம கூடுமானவரையில் சீக்கிரம் விசாரிக்கிறதுக்காகதான் நாங்க போராடிட்டு இருக்கோம் என்றார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்