ஜெயலலிதா குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் திகதி இதோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
539Shares
539Shares
lankasrimarket.com

தமிழகத்தில் சசிகலா குடும்ப உறுப்பினர்களிடம் வருவமான வரித்துறையினர் சோதனை நடத்தியதையடுத்து தற்போது போயஸ் கார்டனைத் தொடர்ந்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்தலாம் என வருமான வரித்துறை ஒரு புதிய பட்டியலை தயார் செய்து மத்திய நேரடி வரிகள் அமைப்பிற்கு அனுப்பியுள்ளது.

அந்த பட்டியலில், ஜெயலலிதாவின் தனிப்பட்ட அறையும், தலைமைச் செயலகமும், ஜெயலலிதாவுக்கு நண்பர்களாக இருந்த சாராய உடையார், வைகுண்டராஜன் போன்ற தொழிலதிபர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இவர்கன் அனைவரிடத்திலும் சோதனைகளை முடித்து அது தொடர்பான முழு அறிக்கைகளை டிசம்பர் 18 ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டெல்லி பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 18ஆம் திகதி என்பது குஜராத் தேர்தல்கள் முடிவடையும் திகதியாகும். அன்றைய தினம் ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்களின் சொத்துக்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜெயலலிதாவின் உயில் மற்றும் சொத்துக்கள், அவரது மருத்துவ சிகிச்சை ஆகியவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்