வயதான பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை: காரணமான மகன்

Report Print Raju Raju in இந்தியா
359Shares
359Shares
ibctamil.com

மகனுக்கு உதவ முடியாத விரக்தியில் வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஊத்துக்கோட்டையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப ரெட்டியார் (85) இவர் மனைவி கோவிந்தம்மாள் (80)

இவர்களின் மகன் செல்வராஜுக்கு (55) சர்க்கரை நோய் காரணமாக கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.

செல்வராஜுக்கு சாந்தி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பினால் படுக்கையில் கிடந்த கணவரை சாந்தியால் கவனிக்க முடியவில்லை.

இதனால் வயதான பெற்றோர் செல்வராஜை பராமரித்து வந்தனர். இந்நிலையில் வயோதிகம் காரணமாக பெற்றோரும் படுத்த படுக்கையாகினர்.

மகனுக்கு உதவ முடியாத விரக்தியிலும், மருமகளுக்கு பாரமாக இருக்க விரும்பாததாலும் கிருஷ்ணப்ப ரெட்டியாரும், கோவிந்தம்மாளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்