ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு: பதறியடித்து வந்த விவேக்

Report Print Santhan in இந்தியா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் இறங்கியுள்ளனர்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் இன்று இரவு 10 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனார் அறையில் மூன்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதை கேள்விப்பட்ட, ஜெயா டிவி சிஇஓ விவேக் மற்றும் அவரது மனைவி அங்கு விரைந்தனர். ஆனால், போயஸ் கார்டனில் அவரது கார் செல்ல மறுக்கப்பட்டதால், விவேக் மட்டும் உள்ளே அனுப்பப்பட்டார். அவருடைய மனைவி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...