நடிகை புவனேஸ்வரி மகன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

Report Print Kabilan in இந்தியா

நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலியல் வழக்குகளில் சர்ச்சைக்குள்ளானவர் நடிகை புவனேஸ்வரி, இவரது மகன் மிதுன் சீனிவாசன் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் பேஸ்புக் மூலமாக அறிமுகமான மருத்துவ கல்லூரி மாணவியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன், ஆசிட் வீசிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் போரில் மிதுனை பொலிசார் கைது செய்தனர்.

இந்த தகவல் சென்னை பொலிஸ் மூலமாக காஞ்சிபுரம் பொலிசுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மிதுன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும், அவர் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என ஆராய்ந்ததில், கொலை மிரட்டல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சீனிவாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...