உயிருக்கு போராடும் நிலையிலும் திருடர்களை தடுத்த ஏடிஎம் காவலாளி: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

டெல்லியில் ஏடிஎம் காவலாளி ஒருவர் தான் துப்பாக்கியால் சுடப்பட்ட போதிலும் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை துணிச்சலுடன் தடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு தலைக்கவசம் அணிந்த இருவர் கொள்ளையடிக்க முயன்றபோது, ஏடிஎம்மின் காவலாளி அவர்களை தடுத்துள்ளார்.

அப்போது கொள்ளையர்கள் அந்தக் காவலாளியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருப்பினும், காயமடைந்த காவலாளி அவர்களை திருட விடாமல் தடுத்துள்ளார். இதனால், அவர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த மக்கள் உடனடியாக காவலாளியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...