என் மகனை கருணைக் கொலை செய்ய உதவிடுங்கள்: ஒரு தந்தையின் கதறல்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது மகனை கருணைக் கொலைச் செய்ய வேண்டி தந்தை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத் மாநிலம் சவர்குண்டலா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மைசூர்யா, வைரத்தினை மெருகேற்றும் தொழில் செய்து வரும் இவருக்கு 12 வயதில் பார்த் என்ற மகன் உள்ளான்.

இவன் ’Subacute Sclerosing Panencephaliti’ என்னும் ஒருவித வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால், ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு இவனுக்கு வலிப்பு ஏற்படும். பார்த்க்கு, இந்த நோய் இரண்டு வயதாக இருக்கும்போதே ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 8 முதல் 10 தடவை அவனுக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பெற்றோரின் கவனிப்பால் இந்த தொடர்ச்சியான வலிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், அவனை முழுமையாக குணப்படுத்த வேண்டி கடந்த ஆண்டு தினேஷ், பிரதமருக்கு மேல்சிகிச்சை மேற்கொள்வதற்காக கடிதம் ஒன்றினை எழுதினார். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், இது குணப்படுத்த முடியாத நோய் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தினேஷ் இரண்டு கடிதங்களை பிரமருக்கு எழுதியுள்ளார்.

அதில் ஒரு கடிதத்தில், தன் மகனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் போல வேறு எந்த குழந்தைகளுக்கும் ஏற்பட கூடாது.

எனவே, இந்த விசித்திர நோய் குறித்த ஆராய்ச்சிக்கு என் மகனை மருத்துவமனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்றும், மற்றொரு கடிதத்தில், அவ்வாறு செய்யப்படும் ஆராய்ச்சி பலனளிக்கவில்லை எனில் தன் மகனை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தினமும் பார்த் படும் வேதனையை தங்களால் பார்க்க முடியவில்லை என்றும் தினேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...