ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களுக்கு சம்மன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வேண்டி கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிக மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதில் வன்முறை வெடித்தது.

இதுகுறித்து நீதி விசாரணை நடத்த பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர், இதன் அடிப்படையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு சம்பவத்தில் வன்முறை நடந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நீதிபதி ராஜேஷ்வரன் நேரடி விசாரணை நடத்தி பின்னர் சிலருக்கு சம்மன் அனுப்பினர்.

அதன் அடிப்படையில் சேலத்தில் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

விசாரணை நடத்த சேலம் வந்த நீதிபதி ராஜேஷ்வரன் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஜனவரி 23-ம் தேதி நடந்த வன்முறையின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...