சொகுசு வாழ்க்கைக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் எம்பிஏ பட்டதாரி ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு, பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளதோடு மட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியில் இரவு பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக நபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த பொலிசார் அந்நபரிடம் விசாரணை நடத்தியது அவனது செல்போனை சோதனை செய்தனர். அதில், பல வீடுகளின் முகப்பு பகுதியின் படங்கள் இருந்தன.

அந்த நபரின் பெயர் அறிவழகன் எனவும் கிண்டி அம்பாள் நகரில் அறை எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து விசாணை நடத்தியதில், எம்பிஏ பட்டதாரியான இவர், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன வேலையை விட்டுள்ளார். அதன்பின், தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையடிப்பதோடு நிறுத்திவிடாமல், கொள்ளையடித்தபின் சில பெண்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்த பெண்கள் சிலரை மிரட்டி செல்போனில் படம் பிடித்தும் வைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அறிவழகன் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அறிவழகன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அறிவழகனை காவலில் எடுத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...