விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவி: 9 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in இந்தியா

கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி இறப்பதற்கு முன்னர் எழுதிய ஒன்பது பக்க கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வருபவர் மந்தவி துபே.

கல்லூரி விடுதியில் மந்தவி தங்கியிருந்த நிலையில் நேற்று விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விடுதி காப்பாளர் மந்தவி தங்கியிருந்த அறை கதவை வெகுநேரமாக தட்டியும் அவர் திறக்காததால், வேறு சாவியை வைத்து திறந்துள்ளார்.

அப்போது மந்தவி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அறையில் மந்தவி எழுதி வைத்திருந்த ஒன்பது பக்க கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அறையில், அதிகளவில் மாத்திரைகள் சிதறி கிடந்தது, மன அழுத்த பாதிப்பால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மந்தவி பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் மாணவியின் நண்பர்கள், விடுதி அறையில் உடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...