17 வயது மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு: சிக்கிய 4 பேர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 17 வயது மாணவியை கடத்தி, கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பாக 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு ரயில் நிலையம் சென்ற குறித்த இளம் பெண்ணை இருவர் ஏமாற்றி, அவர்களோடு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து அவரை 10 நாட்களாக பல முறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை கண்டுபிடித்தபோது அந்த ஹோட்டலின் உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, அவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி குறித்த இளம்பெண் மாயமானதை அடுத்து பொலிசார் கடும் தேடும் வேட்டையில் இறங்கினர்.

இதில் பொதுமக்கள் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் குறித்த ஹொட்டலை சோதனியிட்ட பொலிசார், நவம்பர் 4-ஆம் திகதி அலங்கோலமான நிலையில் இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனை மற்றும் புகார் மனுவின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு தொடர்ந்த பொலிசார் 6-ஆம் திகதி கைதாகியுள்ளனர்.

அவர்கள் மீது நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், பாதிக்கப்பட்ட பெண்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers