ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் விவேக் செய்தது: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in இந்தியா

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், விவேக் எழுதி வாங்கிக் கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவியின் சிஇஓவுமான விவேக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதில், கணக்கில் வராத பல ஆவணங்கள் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து, ஐந்து நாள் வரை நடந்த சோதனையின் முடிவில் விவேக், வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

பூங்குன்றனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது பெயரில் சொத்துக்கள் இருந்தது உண்மை தான் என்றும், ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவற்றையெல்லாம் விவேக் எழுதி வாங்கிக் கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பரோலில் இருந்து வெளியே வந்த சசிகலாவும் சில ஆவணங்களில் கையெழுத்து கேட்டதால், தான் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விவேக்கிடம் விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்கள் டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...