ஊடகவியலாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர்: பிரதமர் மோடி புகழாரம்

Report Print Samaran Samaran in இந்தியா

தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஊடகத்துறையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தேசிய ஊடகவியலாளர்கள் தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்

செய்தியாளர்களும்,ஒளிப்பதிவாளர்களும் செய்திகளை சேகரிக்க கடுமையாக உழைக்கின்றனர். கடந்த மூன்று வருடமாக தூய்மை இந்திய திட்டத்திற்கு ஊடகங்கள் மூலம் பலம் அதிகரித்துள்ளது.

அத்துடன் தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கைத் தொலைபேசிகள் மூலம் செய்திகளை பொதுமக்கள் தெரிந்து கொள்கின்றனர்.

மேலும் துடிப்பான ஜனநாயகம் அமைய, ஊடக சுதந்திரம் அவசியம் எனவும், இந்திய ஊடகங்கள் 125 கோடி மக்களின் திறமை பலம் திறனை வெளிக்காட்டுவதா ஜனநாயகம் அமைய வேண்டும் எனவும், அவர் தனது டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers