குஞ்சு இறந்தது தெரியாமல்... நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் தன்னுடைய குஞ்சு இறந்தது தெரியாமல் தாய் சிட்டுக்குருவி உணவளிக்க முயன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக் குருவிகளை பராமரித்து வருகிறார்.

இவருடைய தோட்டத்திலிருந்த சிட்டுக்குருவி குஞ்சு ஒன்று இறந்து போனது.

இதுதெரியாமல் தாய்க்குருவி உணவினை வாயில் கவ்விக்கு கொண்டு தன் பிள்ளைக்கு ஊட்ட முயன்றுள்ளது.

இறந்து கிடந்த குஞ்சை சுற்றி வந்த நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னரே இறந்ததை அறிந்து கொண்டதாம்.

இதனால் தாய்க்குருவி சோகத்தில் மூழ்க, இச்சமயம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து இறந்த சிட்டுக்குருவியை செல்வராஜ் மண்ணில் புதைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...