கள்ளக்காதலால் சம்பவம்: ஆள் மாறி கொலை செய்த துயரம்

Report Print Raju Raju in இந்தியா

கள்ளத்தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆள் மாறி கொலை செய்த குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்து வந்தவர் சசிகுமார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சசிகுமாருடன் தங்கியிருந்த பழனிச்சாமி என்பவர் சரண்யா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பழனிச்சாமியை கொலை செய்ய வந்த சரண்யாவின் கணவர் சிவபெருமாள் மற்றும் டேவிட் ஆகியோர், தவறுதலாக சசிகுமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த சிவபெருமாள் மற்று டேவிட் ஆகிய இருவரையும் பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து தப்பி சென்று திருச்சியில் தலைமறைவாக இருந்த இருவரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்