தனக்கு தானே தீ வைத்து கொண்ட 14 வயது சிறுவன்: விசாரணையில் வெளியான திடுக் தகவல்

Report Print Santhan in இந்தியா
945Shares
945Shares
ibctamil.com

தமிழகத்தில் 14 வயது சிறுவன் ஆசிரியர் கண்டித்ததால், அவமானம் தாங்காமல் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் திருப்பத்தூர் அருகே இருக்கும் ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகனுக்கு 14 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.

இவன் இன்று பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பள்ளியில் சக மாணவனிடம், இந்தச் சிறுவன் பர்சை திருடியதாக, பள்ளியின் ஆசிரியர் இவரை கண்டித்துள்ளார்.

இதனால் பெரிதும் அவமானம் அடைந்த சிறுவன் பள்ளி செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மண்ணெண்ணெய் எடுத்துச் சென்று மாந்தோப்பில் தனக்கு தானே உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டான்.

இதில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்