காதலியை உயிரோடு எரித்தது ஏன்? காதலனின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1419Shares
1419Shares
ibctamil.com

சென்னையில் வாலிபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் காதலியை உயிரோடு தீவைத்து எரித்துகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், வெளிநாட்டில் வேலை செய்கிறார், இவரது மனைவி ரேணுகா.

இவர்களுக்கு இந்துஜா, நிவேதா என்ற மகள்களும் மனோஜ் என்ற மகனும் உள்ளனர்.

நேற்றிரவு ரேணுகா வீட்டிலிருந்து காப்பாற்றுங்கள் என்ற அலறல் கேட்டுள்ளது, அதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, ரேணுகா, இந்துஜா, நிவேதா ஆகியோர் தீயில் கருகியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

உடனடியாக, அவர்களை மக்கள் காப்பாற்ற முயன்றனர். இந்தச் சம்பவம் குறித்து பொலிசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த பொலிசார், ரேணுகா, நிவேதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே இந்துஜா உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் இந்துஜா பணியாற்றியுள்ளார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்தது. இந்தத் தகவல், இந்துஜாவின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும் கண்டித்துள்ளனர்.

அதன்பிறகு ஆகாஷூடன் பேசுவதை இந்துஜா தவிர்த்துள்ளார். இதில் விரக்தியடைந்த ஆகாஷ், இந்துஜாவை பின்தொடர்ந்துள்ளார். நேற்றிரவு இந்துஜா வீட்டுக்குச் சென்ற ஆகாஷ், . 'இந்துஜாவைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படி ரேணுகாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு ரேணுகா சம்மதிக்கவில்லை. இதனால், அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஆகாஷ், இந்துஜா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தீயில் கருகிய இந்துஜா உயிருக்குப் போராடியுள்ளார். அவரைக் காப்பாற்ற வந்த ரேணுகா, நிவேதா மீதும் தீப்பிடித்தது.

இதனால் மூன்று பேரும் தீயில் கருகினர். உடனடியாக அங்கிருந்து ஆகாஷ் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டஆகாஷ் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்குப் பள்ளி பருவத்திலிருந்தே இந்துஜாவைத் தெரியும். அவர், படித்து ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், நான் வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தேன்.

சின்ன வயதிலிருந்தே இந்துஜாவை விரும்பினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்க ஆரம்பித்தனர் இந்துஜா குடும்பத்தினர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டார்.

அவளை என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன் நேற்றுகூட அவரிடம் என் காதலை ஏற்றுக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். ஆனால், இந்துஜா மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் என்னைக் கேவலமாகப் பேசினர்.

எனக்குக் கிடைக்காத இந்துஜா இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதி அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீயை வைத்தேன்' என்று கூறியுள்ளார்.

ஆகாஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேணுகா மற்றும் நிவேதாவுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டும் என பொலிசார்தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்