ஜோதிடர் சொன்ன வார்த்தை: 11 வயது சிறுவனை உயிரோடு புதைக்க முயற்சித்த கும்பல்

Report Print Santhan in இந்தியா
154Shares
154Shares
ibctamil.com

இந்தியாவில் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 11 வயது சிறுவனை ஏழு பேர் கொண்ட கும்பல் உயிரோடு புதைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீந்திரா, இவரிடம் ஜோதிடர் ஒருவர் சிறுவனை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் தனது நிலத்தில் கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுவனை ஜோதிடர் உட்பட 7 பேர் கொண்ட கும்பலுடன் உயிரோடு புதைக்க முயற்சி செய்துள்ளார்.

இவர்களிடன் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் நரபலி கொடுக்க முயன்ற சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

அதன் பின் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்