முதலமைச்சர் அணியும் ஷூவின் விலை ரூ.60,000

Report Print Arbin Arbin in இந்தியா
102Shares
102Shares
ibctamil.com

தான் ஒரு சோசியலிஸ்ட் என கூறி வரும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அணியும் ஷூவின் விலை ரூ.60,000 என எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'ஹப்லாட்' ரக வாட்ச் அணிந்து இருப்பதாக முன்பு குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வாட்சை தமக்கு மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அன்பளிப்பாக தந்ததாக அப்போது சித்தராமையா விளக்கம் அளித்தார்.

இருப்பினும் சர்ச்சை தொடர்ந்ததால், அந்த வாட்சை அரசு கருவூலத்திடம் அளித்து விட்டு அது மாநில சொத்து என அறிவிப்பும் வெளியிட்டார்.

இதன் பிறகு உள்ளூர் பத்திரிகைகளில், சித்தராமையாவிடம் தலா ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ரோலக்ஸ் வாட்ச்கள், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'ஹப்லாட்' ரக வாட்ச், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடிமார்ஸ் பிக்யூட் ரக வாட்ச், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'திஸாட்' ரக வாட்ச் ஆகியவை உள்ளன.

மேலும், அவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'லூயிஸ் உயிட்டன்' ரக, 'ஷூ'க்களை தான் அணிகிறார். அத்துடன், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'ஹெர்மஸ்' ரக தோல் செருப்புகளும் அவரிடம் உள்ளன என செய்தி வெளியிட்டன.

தற்போது குமாரசாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். தான் ஒரு சோசியலிஸ்ட் என கூறி வரும் முதல்வர் சித்தராமையா, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'ஷூ'க்களை தான் அணிந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் சோசியலிச கொள்கைகள் குறித்து பேசி வருபவர் அவர். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த யாராக இருந்தாலும் அவரை, 'போலி' என முத்திரையிடுவதில் சித்தராமையா நிபுணர். ஆனால், அந்த வார்த்தை அவருக்கு தான் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்