பாகுபலியாக மாற நினைத்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா
377Shares
377Shares
ibctamil.com

பாகுபலி திரைப்படத்தின் பிரபாஸாக மாற நினைத்து வீரதீர செயலில் இறங்கிய இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.

இந்த ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமாகவும், இந்திய சினிமா வரலாற்றில் மகுடமாகவும் அமைந்தது பாகுபலி இரண்டாம் பாகம்.

இதில் பாகுபலியாக நடித்த நடிகர் பிரபாஸ் குறித்த படத்தில் பல சாகசங்கள் புரிந்திருப்பார். பிரபாஸின் சாகசங்களில் யானை மீது கம்பீரமாக நிற்கும் காட்சி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட காட்சிகளுள் ஒன்றாகும்.

இதனைப்போன்றே தானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட கேரளாவின் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள வளர்ப்பு யானை ஒன்றைக்கொண்டு தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணியதோடு, தனது பேஸ்புக்கில் இதனை நேரலை செய்யவும் தீர்மானித்தார்.

இதற்காக தனது நண்பரை சற்று தொலைவில் இருந்து வீடியோ எடுக்க கூறிவிட்டு முதலில் அந்த யானைக்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை கொடுத்து நண்பராகும் முயற்சியில் ஈடுபட்டார் அந்த இளைஞர்.

பின்னர் யானை தன்னிடம் சகஜமாக பழகுவதாக நினைத்த அந்த இளைஞர், அதன் தந்தத்தை பிடித்து அதன் மீது ஏற முயற்சித்த போது திடீரென அந்த இளைஞரை முட்டித் தள்ளி தூக்கி வீசியது.

இதில் சில அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் தலைகுப்புற தரையில் விழுந்தார். அசைவுகள் அற்ற நிலையில் தலைகுப்புற விழுந்து கிடந்த இளைஞரை அவரின் நண்பர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சையில் உள்ள இளைஞர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

இளைஞரின் இந்த விபரீத செயல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞரின் இந்த செயல் இதைப்போன்று விபரீத ஆசை கொண்டோர்க்கு பாடமாக அமைந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்