ஐந்து நாட்களுக்கு பின்னர் முடிந்தது ஐடி ரெய்டு: சிக்கிய ஆவணங்கள்?

Report Print Kabilan in இந்தியா
203Shares
203Shares
ibctamil.com

சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐந்து நாட்களாக நடந்த வருமான வரி சோதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி, ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகங்கள் மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான 187க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிடத் தொடங்கினர், இது படிப்படியாக உயர்ந்து 200 இடங்கள் வரை தொடர்ந்தது.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி அலுவலகம் மற்றும் ஜெயா டி.வியின் இயக்குநர் விவேக் இல்லம் ஆகிய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்தது.

இந்நிலையில், சோதனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே விசாரணைக்காக கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி, போயஸ் தோட்ட ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை அடுத்து அவர்கள் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை முன்பு ஆஜரானார்கள்.

மேலும் திவாகரன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி நேரில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்