நடிகர் விஷால் வீட்டு பணிப்பெண் குறித்து பொலிசில் புகார்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in இந்தியா
610Shares
610Shares
ibctamil.com

நடிகர் விஷால் வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் விஷாலின் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இங்கிருந்த தங்கமோதிரம், கம்மல் மற்றும் வளையல்கள் திடீரென காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து. விஷாலின் மேலாளர் ரகுபதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில், விஷால் வீட்டு வேலைக்கு புஷ்பா என்ற பெண் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென வேலைக்கு வருவதை அவர் நிறுத்திவிட்டார்.

நகை திருட்டு சம்மந்தமாக புஷ்பா மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புகாரையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்