பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க தாயும் மகளும் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா
277Shares
277Shares
ibctamil.com

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக தாயும் மகளும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த நடந்துள்ளது.

கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட ஹவ்ரா ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், 40 வயது பெண் ஒருவரும் அவரது 15 வயது மகளும் பயணம் செய்தனர்.

ரயில் கான்பூர் மற்றும் சந்தாரி ரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் ஏறிய 15 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றனர்.

இதிலிருந்து உடனடியாக தப்பிக்க தாயும் மகளும், ரயிலிலிருந்து கீழே குதித்தனர். இதனால் படுகாயம் அடைந்த அவர்கள், பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ரயில்வே பொலிசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்