பக்கத்து வீட்டிற்கு சென்ற 4 வயது மகனை கொலை செய்த தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா
438Shares
438Shares
ibctamil.com

மும்பையில் பக்கத்து வீட்டிற்கு சென்ற காரணத்தால் 4 வயது மகனை அவரது தந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nala Sopara நகரை சேர்ந்த கௌரி என்ற பெண்மணிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் விஷால் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் அனைவரும் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் இக்குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று அதிகமாக விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் விஷாலுக்கும் பக்கத்து வீட்டினருக்கும் அதிகமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது, குறிப்பாக, கடைசி மகன் பியூஷ், தனது வளர்ப்பு தந்தை சொல்வதை கேட்காமல் பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளான்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது, இதனால் கோபம் கொண்ட விஷால், பியூஷை தனது வீட்டிற்கு இழுத்துசென்று தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த வாளியில் அமுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

தனது சகோதரன் கொல்லப்படுவதை ஏனைய இரு சகோதரர்களும் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இதனை கவனித்த விஷால், அம்மா வந்து கேட்டால் குழந்தை வாளியில் விழுந்து இறந்துவிட்டான் என்று கூறிவிடுங்கள் என மிரட்டியுள்ளார்.

வீட்டிற்கு வந்த கௌரி தனது குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார், சம்பவம் குறித்து கேட்டபோது, குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து இறந்துவிட்டது என விஷால் பதிலளித்துள்ளார்.

இந்த பதிலால் சந்தேகமடைந்த கௌரி தனது மூத்த மகனிடம் விசாரித்ததில் அவன் உண்மையை கூறியதை கேட்டு கோபமடைந்த கௌரி விரைந்து சென்று பொலிசில் புகார் அளித்துள்ளார்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், விஷாலை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்