சசிகலா உறவினர் வீடுகளில் கைப்பற்றியது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உட்பட 187 இடங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரையிலும் ரூ.6 கோடி ரொக்க பணம் மற்றும் 8.5 கிலோ தங்க- வைர நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு, பெங்களூர், ஹைதராபாத் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத பல கோடி பணம், தங்க- வைர நகைகள், சொத்து விபரங்கள், 60 போலி நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது.

டிடிவி தினகரனின் சகோதரர் வீட்டிலிருந்து 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தான் அதிகளவு பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலிருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுதியில் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து ரூ.1200 கோடிக்கான சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றதால் உறவினர்கள், ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers