மூன்றாவது நாளாக ஐடி ரெய்டு: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் உட்பட 40 இடங்களில் இன்றும் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வருமான வரித்துறை ரெய்டு உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார்.

ஆனால் அந்த உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றும், அரசியல் காழ்புணர்ச்சியால் ரெய்டு நடப்பதாக கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.

மேலும் வருமான வரித்துறையினரின் சோதனையை வரவேற்பதாகவும், எங்களை குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரனின் உறவினர், தினகரனின் ஜோதிடர் வீடு, புதுச்சேரியிலுள்ள நகைகடை உள்ளிட்ட 40 இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...