ஐடி ரெய்டில் அதிகாரிகள் தேடியது இதுதான்: சசிகலாவின் உறவினர்கள் ஷாக்

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று நடந்த சோதனையில் தினகரனின் தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

மேலும் 40 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தினகரனின் பண்ணை வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சசிகலா குடும்பத்தாருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போது சோதனை நடத்திய அதிகாரிகள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களை பற்றி விசாரித்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி கேட்டதாகவும் கூறினர்.

ஜெயலலிதா உயில் எழுதி வைத்தாரா? அப்படி இருந்தால் எங்கே யாரிடம் உள்ளது என துருவி துருவி கேள்விகளை கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே கேள்விகளை சசிகலாவுக்கு நெருக்கமான மருத்துவர்கள், வழக்கறிஞர்களிடமும் கேட்டதாக தெரிகிறது.

இதன் மூலம் சசிகலா, தினகரனை அரசியலில் இருந்து முழுவதுமாக ஒழித்துக் கட்டவே இந்த ரெய்டு நடப்பதாக முணுமுணுக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers