பணி நேரம் முடிந்துவிட்டது என்று புறப்பட்ட விமானி: பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட விமான பயணிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஏர் இந்தியா விமானத்தின் விமானஓட்டுநர் ஒருவர் தனது பணிநேரம் முடிந்துவிட்டது எனக்கூறி பாதியிலேயே சென்றுவிட்ட காரணத்தால்,விமான பயணிகள் பெரும் திண்டாட்டத்தற்கு ஆளாகியுள்ளனர்.

லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூருக்கு சரியாக இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய நேரத்தை தாண்டி நள்ளிரவு 1.30 மணிக்கு சென்று இருக்கிறது.

மேலும், ஜெய்ப்பூரில் இருந்துடெல்லி புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. 1.30 மணிக்குஜெய்ப்பூர் வந்த விமானம் அங்கிருந்து கிளம்பாமல் அப்படியே நின்றுள்ளது.

ஏனெனில், விமானி 2 மணியுடன் தனதுபணிநேரம் முடிவடைந்துவிட்டது என்ற கூறி விமானத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டார்.

அந்த விமானத்தை அப்போது உடனடியாக இயக்குவதற்கும் எந்த விமானியும் அப்போதைய பணி நேரத்தில்இல்லை.

இந்த நிலையில் அந்த விமானத்தின் பயணிகள் அனைவரும் பாதியில் இறக்கி விடப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் பயணிகளிடம் ''உங்களுக்கு பணம் அளிக்கப்டும் பேருந்தின் மூலம் டெல்லிக்கு சென்றுவிடுங்கள் என்று நிறுவனம்கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, 48 பயணிகளும் பேருந்துமூலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers