சிங்கத்தை துரத்திச்சென்று கூண்டில் சிக்கிய இளைஞர்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் சிங்கத்தை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்ற நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு இளைஞர்கள் சிங்கங்களை துரத்திச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தில் வன உயிரினங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது குற்றம் என்பதால், குறித்த வீடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைக்கொண்டு இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த யூன் மாதத்திலும் இதே போன்று, வனப்பகுதியில் சிங்கங்களை காரில் துரத்திச்சென்ற வீடியோ வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியது.

இதனால், சிங்கங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில், காரில் சென்றவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர், ‘கமெராவில் படமெடுக்கதான் ஷூட் என கூறினோம்’ என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தொடர்ந்து இது போல சம்பவம் நடைபெற்று வருவது உயிரியல் ஆய்வாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்