ஜெயலலிதாவின் உதவியாளரிடம் 350 கோடி சொத்து வந்தது எப்படி?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர்.

இதில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரின் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வந்தது எப்படி? என கேள்வி எழுந்துள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகரில் வசித்து வருபவர் பூங்குன்றன். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரது உதவியாளராக இருந்தார்.

போயஸ் கார்டனில் இவரை தாண்டி தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும். அது அமைச்சராக இருந்தாலும் சரி, கட்சியில் முக்கிய பதவி வகித்தாலும் சரி. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை பூங்குன்றன் அசைக்க முடியாத சக்தியாக போயஸ்கார்டனில் வலம் வந்தார்.

அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்தார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பராமரிக்கும் வேலைகளையும் கவனித்து வந்தார். மேலும் இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பல நிறுவனங்களுக்கு இயக்குனராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது வீட்டில் வருமானவரித்துறையை சேர்ந்த 12 பேர் சோதனை நடத்தினர். பூங்குன்றனுக்கு 350 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாகவும், அவை எப்படி வந்தது, யாருக்கு சொந்தமானது? என வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி போட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

20 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளர் என்பதால், அவர் அதிமுகவின் முக்கிய புள்ளிகளின் பினாமியாக இருந்துள்ளாரா? என்ற கோணத்திலும் வருமானவரித்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்