71 வயதான மூதாட்டியை கற்பழித்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Peterson Peterson in இந்தியா

இந்தியாவில் 71 வயதான மூதாட்டியை கற்பழித்து கொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள Ranaghat நகர் நீதிமன்றம் தான் இப்பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதே நகரில் பெயர் வெளியிடப்படாத 71 வயதான மூதாட்டி ஒருவர் செவிலியப்பணி செய்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சில மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

நபர்களில் ஒருவன் மூதாட்டியை கொடூரமாக தாக்கி கற்பழித்துள்ளான்.

இச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘அன்னை தெரசா பணிபுரிந்த மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூரமான செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, மூதாட்டியை கற்பழித்து கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனையும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட பிற 5 நபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தனக்கு நிகழ்ந்த கொடுமையை தொடர்ந்து மூதாட்டி அம்மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்