சொர்க்கத்திலும் இணைந்த தம்பதி: கணவர் இறந்த செய்தி கேட்டு உயிரிழந்த மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை மாவட்டத்தில் கணவனின் இறப்பினை தாங்கி கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்துள்ளார்.

பொட்டப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன்( 65), பரணி(60) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

பொட்டப்பட்டியில் உள்ள வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் நேற்று விஸ்வநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பரணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பரணியை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்தடுத்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்