அந்த மாணவனை தூக்கிலிடுங்கள்: தந்தையின் குமுறல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

குர்கானில் பள்ளித்தேர்வை ஒத்திவைப்பதற்காக 2 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி, பிரதுமன் என்ற சிறுவனை அதே பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி கழிப்பறையில் வைத்து கழுத்தறுத்து கொன்றுள்ளான்.

இதற்கடுத்து, அந்த மாணவனை ஆறு நாள்கள் காவலில் வைக்கக் கோரியது சிபிஐ. தற்போது, அவனை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க குர்கான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறுவன் பிரதுமனின் பெற்றோர், அந்த மாணவனை 18 வயது இளைஞனாகக் கருதி, தூக்குத் தண்டனை அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் சுஷில் டெக்ரிவால்(Sushil Tekriwal ) கூறுகையில், “அந்த மாணவனை இளைஞனாகக் கருதி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்