உணவகத்தில் தகராறு: வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் வீச்சு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் துரித உணவகம் ஒன்றில் தகராறு செய்த வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

மராட்டிய மாநிலம் மும்பை உல்லாஸ் நகரில் சாலையோரத்தில் நடத்தி வரும் துரித உணவகத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கு நண்பர்களுடன் உணவருந்த சென்ற ஒரு இளைஞர் உணவின் சுவை மற்றும் கட்டணம் குறித்து பிரச்சினை எழுப்பி தகராறு செய்துள்ளார்.

இதில் ஏற்பட்ட வாய்த்தரகாறில் இளைஞரின் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து உணவக ஊழியர் மீது தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

வீடியோவை காண

இதனால் ஆத்திரமடைந்த உணவக ஊழியர் அங்கு இரும்பு சட்டியில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை இளைஞர் மீது ஊற்றியுள்ளார்.

இதில் இளைஞர்கள் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகர பொலிசார் வழக்குப்பதிவு செய்து உணவக உரிமையாளர் மற்றும் ஊழியரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்