ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சின்: ஹீரோவாக மாறிய ஊழியர்

Report Print Kabilan in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் ஆளில்லாமல் ஓடிய ரயில் எஞ்சினை பணியாளர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் அதிவிரைவு ரயில் ஒன்று, கர்நாடக மாநிலம் வாடி ரயில் நிலையத்தினை அடைந்தது நேற்று மதியம் 3 மணியளவில் அடைந்தது.

அங்கு ரயிலில், டீசல் எஞ்சினில் இருந்து மின்சார எஞ்சினுக்கு மாற்றும் பணி நடந்தது.

பின்னர், அந்த ரயில் எஞ்சினை வாடி ரயில் நிலையத்திலிருந்து சோலாப்பூர் வரை சென்று விட்டு மீண்டும் வாடி ரயில் நிலையத்திற்கே வந்து சேர்ந்தது.

எஞ்சின் பெட்டியில் இருந்து ஓட்டுநர் இறங்கி சென்ற சிறிது நேரத்திலேயே தானாக இயங்கத் தொடங்கியது.

இதனைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர், ரயில் நிலைய அதிகார்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அவர்கள் அருகில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து எதிரில் வரும் ரயில்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கமாறு கூறினர்.

எனினும், அசம்பாவிதத்தினை தவிர்ப்பதற்காக ரயில் பணியாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ரயிலை பின் தொடர்ந்தார். சுமார் 13 கி.மீ தூரம் ஓடிய ரயிலை நால்வர் ரயில் நிலையம் அருகே விரட்டி பிடித்த அவர், உடனடியாக ரயிலில் ஏறி எஞ்சினை நிறுத்தினார். ரயில் பணியாளரின் இந்த செயலை பார்த்து வியந்த அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

எனினும், ஆளில்லாமல் எஞ்சின் ஓடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்