திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்: இளைஞர் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் அவரை கத்தியால் சரமாரியாக குத்திய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, மும்பையை சேர்ந்த கவிதா அகர்வால் (33) என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கவிதாவின் கணவர் லலித் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்போது மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்த கவிதா திருமண தகவல் இணையத்தில் தனது விபரங்களை பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த பெங்களூரை சேர்ந்த லோஹித் (36) என்ற நபர் கவிதாவை போனில் தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

சில நாட்கள் இருவரும் போனில் பேசிய நிலையில், லோஹித் குறித்த மற்ற விபரங்களை அறிய பெங்களூரில் உள்ள அவர் வீட்டுக்கு கவிதா சென்றுள்ளார்.

வேலை எதுவும் செய்யாமல் லோஹித் தாயுடன் வசித்து வந்ததை கவிதா பார்த்துள்ளார். மேலும், லோஹித்தின் பழக்கவழக்கங்கள் சரியில்லை எனவும், இதன் காரணமாக அவர் முதல் மனைவி பிரிந்து சென்றதும் கவிதாவுக்கு தெரியவந்தது.

இதனால் லோஹித்தை திருமணம் செய்யும் முடிவை கைவிட்ட கவிதா மும்பைக்கு கிளம்ப தயாரானார்.

அவரை வீட்டிலிருந்து வெளியில் விட மறுத்த லோஹித் தன்னை திருமணம் செய்யாவிட்டால் கொன்றுவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

அதற்கு கவிதா மறுப்பு தெரிவிக்க, அவரின் தோள்ப்பட்டை, காது, வலது கை, கன்னம் போன்ற இடங்களில் லோஹித் கத்தியை வைத்து குத்தியுள்ளார்.

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த லோஹித்தின் தாய் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் லோஹித்தை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்