சினிமா பாணியில் திட்டம்: பரபரப்பை கிளப்பிய ரெய்டு

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் உட்பட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக சென்னை வருமான வரித்துறையினர் போட்ட பலே திட்டம் அம்பலமாகியுள்ளது.

சோதனை பற்றிய தகவல்களை வெளியே கசியவிடாது கவனமாக இருப்பதில் சில யுக்திகளை கையாண்டுள்ளனர்.

வழக்கமாக ஒரு குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் தான் கார்களை முன்பதிவு செய்வார்களாம், ஆனால் இந்த முறை திருமணத்திற்கு என கூறி Fast Track-ல் 200 கார்களை பதிவு செய்துள்ளனர்.

இதன்படி இன்று காலை காரை வாடகைக்கு எடுக்கும் போது ஒரு சிறிய அட்டையை முன்பகுதியில் ஒட்டுமாறு கூறியுள்ளனர்.

அதில் (SRINI-weds-MAHI) என்று எழுதப்பட்டிருந்ததாம், ஓட்டுநர்களுக்கும் சம்பவ இடத்திற்கு சென்ற பின்னரே வருமான வரித்துறை சோதனை என தெரிந்து கொண்டார்களாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்