நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை: வைகோ

Report Print Kabilan in இந்தியா

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக இணையத்தில் வெளியான தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த மத போதகர் மோகன் சி.லாசரஸ், பிரசங்கத்தின் போது மதிமுக கட்சியின் தலைவர் வைகோ தனது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதற்கான ஞானஸ்தானம் எடுத்துவிட்டதாகவும் கூறிய வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும், அந்த வீடியோவில் வைகோ தினமும் பைபிள் படிப்பதாகவும், அரசியல் கட்சித் தலைவர் என்பதனால் அவர் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வைகோ கூறுகையில், ‘ என்னுடைய சகோதரி கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர். மகளும், மருமகனும் அதே மதத்தில் இருக்கிறார்கள். ஆனால், நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை.

என்னுடைய மனைவி கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருவார். நான் எந்த மதத்தையும் புண்படுத்தி பேசியதில்லை. திருக்குறளைப் படிப்பதுபோல தான் பைபிள், திருக்குரானையும் படிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்