சசிகலாவின் கணவர், உறவினர் உட்பட 160 இடங்களில் ஐடி ரெய்டு

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் விவேக், திவாகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன், தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும், அதன் ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

மேலும் தஞ்சாவூரில் வசிக்கும் சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேசன் வீட்டிலும், சில மாதங்களுக்கு முன்பு காலமான தம்பி மகன் மகாதேவன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கோடநாடு உட்பட 160 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்